போடி அருகே சூதாடியவர்கள் கைது
போடி, மார்ச் 18: தேனி மாவட்டம், சின்னமனூர் தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். போடி அருகே சின்னமனூர் ஒன்றியத்தில் உள்ள குப்பனாசாரிப்பட்டி பகுதியில் சென்ற போது, அங்குள்ள காளியம்மன் கோயில் பகுதியில் 2 குழுவினர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். போலீசார் விசாரணையில், அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(55), விநாயகர் கோயில் தெரு ரஞ்சித்குமார்(35), பிச்சைமணி(53), திம்மிநாயக்கன்பட்டி காந்தரூபன்(58), முருகன்(62), சக்திகுமார்(41), ராதா கிருஷ்ணன்(52), வாசகர் (45), ராமகிருஷ்ணன்(45) ஆகியோர் என தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், சூதாட்டத்திற்காக வைத்திருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.