காதலியை காயப்படுத்திய காதலன் மீது வழக்கு
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் 27.இவரது 25 வயது காதலி. இருவரும் டூவீலரில் தேவதானப்பட்டி பைபாஸ் ரோட்டில் சென்றுள்ளனர்
டூவீலரை ஜெயக்குமார் ஓட்டிக் கொண்டே ‘நீ வாழ்கிறாயா அல்லது சாகுறியா’ என காதலியிடம் கேட்டுள்ளார். அதற்கு காதலி சாகிறேன் என தெரிவித்துள்ளார். இதனால் டூவீலரை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாக ஓட்டியதால் காதலி டூவீலரில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.
தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தேவதானப்பட்டி போலீசார் ஜெயக்குமாரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.