போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.
உத்தமபாளையம்: உங்களைத் தேடி உங்கள் ஊரில் நிகழ்ச்சியில் பங்கேற்க உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்திற்கு நேற்று காலை கலெக்டர் ரஞ்ஜீத்சிங் வந்தார். அங்கு அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.
கருத்தராவுத்தர் கல்லூரியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ஏற்பாடு செய்திருந்த போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசினார். கல்லூரி முதல்வர் எச். முகமது மீரான் தலைமை வகித்தார். ஆர்.டி.ஒ. தாட்சாயணி, தாசில்தார் கண்ணன், இன்ஸ்பெக்டர் சூரிய திலகராணி, பேரூராட்சி தலைவர் முகமது அப்துல் காசிம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக உத்தமபாளையம் சிவில் சப்ளை கிட்டங்கிக்கு சென்று, அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த உணவு பொருள்கள், அவற்றின் நிலை பற்றியும், தட்டுப்பாடு உள்ளதா, எடையை சரியாக அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டார். கோம்பை, பண்ணைப் புரம் பேரூராட்சிகளை பார்வையிட்டார்.