65 அடியை நெருங்குகிறது வைகை அணை நீர்மட்டம்
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் வைகை அணை நீர்மட்டம் 65 அடியை நெருங்கி உள்ளது. நீர்மட்டம் 66 அடியாக உயரும் போது முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும்.
வைகை அணைக்கு முல்லைப் பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு மூல வைகை ஆறுகள் மூலம் நீர்வரத்து உள்ளது. கடந்த 4 நாட்களாக பெய்து வரும் மழையால் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் 16ல் 62.27 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 64.30 அடி வரை உயர்ந்துள்ளது. ஓரிரு நாட்களில் 66 அடியாகும் என தெரிகிறது. அப்போது முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும்.
நேற்று அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1958 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு கால்வாய் வழியாக வினாடிக்கு 400 கன அடி, மதுரை, தேனி, ஆண்டிபட்டி – சேடபட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.