பென்னிகுவிக் சிலைக்கு மரியாதை
கூடலுார், : உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுவிக் சிலைக்கு தேனி மாவட்ட தண்ணீர் சுத்திகரிப்பு சாதனங்கள் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தென் தமிழக மக்களின் ஜீவாதாரமாக உள்ள முல்லைப் பெரியாறு அணையை கட்டிய லோயர்கேம்ப் மணிமண்டபத்தில் உள்ள பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தண்ணீரின் தேவையை அறிந்து பொதுமக்கள் சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும் என உறுதிமொழி எடுக்கப்பட்டது. தலைவர் சுரேஷ், நாகராஜன், செயலாளர் திலகராஜ், ஆதிஷ்குமார், பொருளாளர் ஆனந்த், குமார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்