மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்
தேனி மாவட்டத்தில் தமிழக அரசு மற்றும்தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பாக வருகிற 19-10-2024 சனிக்கிழமை அன்று மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
அதனை முன்னிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒலிபெருக்கி வாகனத்தை தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் சஜீவனா அவர்கள் கொடிஅசைத்து துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரமாபிரபா தேனி மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது