வேளாண் கல்லுாரி மாணவிகள் விளக்கம்
கம்பம் : மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள் ராலியா பேகம், ரதி, கோ. ரித்திகா, ரூபியா, ரித்திகா, ரூபியா, சஹானா, சக்தி, சம்யுக்தா, சக்திஜா ஆகியோர் கம்பம் வட்டாரத்தில் விவசாயிகளை சந்தித்து, அவர்கள் பின்பற்றும் தொழில்நுட்பங்களை தெரிந்தும், நவீன தொழில் நுட்பங்களை விளக்கி கூறினர். சாமாண்டிபுரம் விவசாயி பாலகுருநாதன் தோட்டத்தில் ஜீவாமிர்தம், பஞ்சகாவ்யம், மீன் அமிலம் தயாரிப்பு பற்றி விளக்கினர்
மாட்டுச் சாணம், கோமியம், நெய், தயிர், பால் கொண்டு பஞ்சகாவ்யம் தயாரிப்பு, மீன் கழிவுகள் மற்றும் நாட்டுச் சக்கரை கொண்டு மீன் அமிலம் தயாரிக்கலாம். மாட்டு சாணம், கோமியம், கடலைப்புண்ணாக்கு, நாட்டு சர்க்கரை மற்றும் மண் கொண்டு ஜீவாமிர்தம் தயாரிப்பு குறித்து விளக்கினர். இயற்கை உரங்களை பயன்படுத்துவதால் மண் வளம் காப்பதுடன் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் என்றன