தி.மு.க ., இப்தார் நோன்பு திறப்பு
பெரியகுளம் : பெரியகுளம் நகர தி.மு.க., மற்றும் வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு சார்பில் மண்டபத்தில் இப்தார் நோன்பு திறப்பு நடந்தது.
நகர செயலாளர் முகமது இலியாஸ் தலைமை வகித்தார். மாவட்ட சிறுபான்மை அமைப்பாளர் சேக்அப்துல்லா வரவேற்றார். தங்கதமிழ்செல்வன் எம்.பி., சரவணக்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் செல்லப்பாண்டியன், தலைவர் வெங்கடாசலம், நகராட்சி தலைவர் சுமிதா உட்பட பலர் பங்கேற்றனர்.–