மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சி ஏப்.1ல் துவக்கம்
தேனி; மாவட்ட விளையாட்டு விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சி ஏப்.1 முதல் ஜூன் 8 வரை 5 கட்டங்களாக நடக்க உள்ளது. பயிற்சி 12 நாட்களாகும். தினமும் ஒரு மணிநேரம் பயிற்சி வழங்கப்படும்.
வகுப்பு காலை 7:30 முதல் காலை 10:30 மணி வரை 3 பிரிவாகவும், மதியம் 3:00 முதல் மாலை 6:00 மணி வரை 3 பிரிவுகளாகவும் நடைபெறும். நீச்சல் கற்றுக்கொள்ள வரும் சிறுவர்கள் குறைந்தபட்சம் 120 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். கட்டணம் ரூ.1200 மற்றும் 18 சதவீத ஜி.எஸ்.டி.,யுடன் செலுத்த வேண்டும். விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை 74017 03505 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.