தோப்புத்துறையில் பெரிய பள்ளிவாசலில் பாலஸ்தீன ஆதரவு நாள் பதாகை ஏந்தி முழக்கம்
வேதாரண்யம், மார்ச் 29: வேதாரண்யம் அடுத்த தோப்புதுறையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பாலஸ்தீன ஆதரவு நாள் தமிழ்நாடு எங்கும் கடைபிடிக்கப்படுகிறது. மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி வேண்டுகோளை ஏற்று, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சேர்ந்தவர்களும் பதாகை ஏந்தி பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவை நல்கி வருகின்றனர்.
அதுபோல் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பதாகை ஏந்தி தங்கள் ஆதரவை வெளியிட்டு வருகின்றனர். இதையொட்டி தோப்புத்துறையில் பெரிய பள்ளி வளாகத்திலும், மர்கஸ் வளாகத்திலும், ஆரிபின் பள்ளி வளாகத்திலும் திரளான இளைஞர்களும் – பெரியவர்களும் பதாகை ஏந்தி பாலஸ்தீன மக்களுக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். இதில் மனிதநேய ஜனநாயக கட்சி பொறுப்பாளர்களும், தொழில் நுட்ப அணி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.