வேதாரண்யம் நகர திமுக சார்பில் ஒன்றிய அரசு கண்டித்து துண்டு பிரசுரம் வழங்கல்
வேதாரண்யம், மார்ச் 29: வேதாரண்யம் நகர திமுக சார்பில் ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை கண்டித்தும், தொகுதி மறு வரை என்ற பெயரில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து துண்டு பிரசுரங்களை வழங்கினர். நாகை மாவட்ட செயலாளர் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் வழிகாட்டுதலின்படி, நகர திமுக செயலாளர் புகழேந்தி தலைமையில், வீடு வீடாகவும் மற்றும் வணிக வளாகங்களிலும் ஒன்றிய அரசை கண்டித்து துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
நிகழ்ச்சியில் வேதாரண்யம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் உதயம்முருகையன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள், அசோக், தாமோதரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் பரிபாலன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அன்பரசு. நகரஇளைஞர் அணி அமைப்பாளர் சுரேஷ் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், வார்டு கழக செயலாளர் உள்ளிட்ட நகர திமுகவினர் கலந்து கொண்டனர்.