Monday, April 21, 2025
மாவட்ட செய்திகள்

அ.தி.மு.க., நிபந்தனை விதிக்க தயாரா? இ.பி.எஸ்.,க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி

”நீட் தேர்வு தொடர்பாக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., இடையே காரசார விவாதம் நடந்தது.

மூன்று நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று (ஏப்.,21) மீண்டும் கூடியது. மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. சட்டசபையில் பேசும் போது, ”நீட் தேர்வுக்கு பிள்ளையார் சுழி போட்டது யாருடைய ஆட்சியில் ? நீட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு மூத்த வழக்கறிஞர் வாதாடினார்” என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கேள்வி எழுப்பினார்.

இது குறித்து பதில் அளித்து சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: எதிர்க்கட்சி தலைவர் யார் கொண்டு வந்தது, யார் கொண்டு வந்தது, கொண்டு வந்த காரணத்தினால் தான் இவ்வளவு சிக்கல் என்று சொல்கிறார். சரி அந்த சிக்கலை சரி செய்வதற்கு, உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. நாங்கள் செய்தது தவறோ, தவறு இல்லையோ, அந்த விவாதத்திற்கு நான் போகவில்லை, விவாதத்திற்கும் வரவும் இல்லை.

இப்பொழுது இருக்கும் நீட் தே ர்வை ரத்து செய்தால் தான் நாங்கள் கூட்டணியில் இருப்போம், இல்லை என்றால் கூட்டணியை விட்டு விலகுவோம் என்று சொல்வதற்கு உங்களுக்கு தகுதி இருக்கிறதா? அதான் கேள்வி. வாக்குறுதி கொடுத்தது உண்மை தான், அதில் நாங்கள் எந்த விதமான மறுப்பும் சொல்லவில்லை.

இப்பொழுது கூட்டணி அமைத்து இருக்கிறீர்களே, இந்த கண்டிஷன் போட்ட உங்களுக்கு அருகதை இருக்கிறதா? நாங்கள் யாரும் ஏமாற்றி ஆட்சிக்கு வரவில்லை. 2 மாதங்களுக்கு முன் 2026ல் மட்டுமல்ல, 2031ம் ஆண்டிலும் கூட்டணியில் இருக்க மாட்டோம் என்று சொல்லிவிட்டு இப்பொழுது கூட்டணி அமைத்து இருக்கிறீர்களே, யாரை ஏமாற்றும் நாடகம் சொல்லுங்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *