தேனி பைபாஸ் ரோட்டில் மண் கொட்டி விரிவாக்கம்; ‘ரிப்ளக்டர்கள் ‘ இன்றி வாகன ஓட்டிகள் சிரமம்
தேனி : தேனி புது பஸ் ஸ்டாண்டில் இருந்து அன்னஞ்சி செல்லும் ரோட்டில் விபத்துக்களை தடுக்க ரோட்டோரங்களில் மணல் பரப்பபடுகிறது.
தேனி கர்னல் ஜான்பென்னிக்குவிக் பஸ் ஸ்டாண்டில் இருந்து அன்னஞ்சி விலக்கு செல்ல மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் 4கி.மீ., துாரத்திற்கு பைபாஸ் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோடு வனப்பகுதி வழியாக செல்கிறது. இதனால் குறிப்பிட்ட பகுதியில் ரோடு விரிவாக்க பணி செய்ய வனத்துறை அனுமதிப்பது இல்லை. இந்த ரோட்டில் பெரும்பான இடங்களில் இருபுறமும் ரிப்ளக்டர் இல்லாததால் வாகனங்கள் ரோட்டை விட்டு கீழே இறங்கி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ள
இதனால் ரோட்டின் ஒரு பகுதியில் மண் பரப்பபட்டு வருகிறது. பணி நடைபெறுவது தொடர்பாக எவ்வித முன்னெச்சரிக்க பலகைகளும் வைக்க வில்லை. இதனால் மண்ணில் இறங்கும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ரோட்டோரத்தில் உள்ள பள்ளங்களை மண் கொட்டி சமப்படுத்தி வருகிறோம்.
மண்ணில் ரோலர் வாகனம் மூலம் சமன்செய்யப்படும். விபத்துக்களை தடுக்கவே இந்த ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. ரிப்ளக்டர்கள் விரைவில் பொருத்தப்படும் என்றார்.