வீரப்ப அய்யனார் குதிரை வாகனத்தில் வீதி உலா
வீரப்ப அய்யனார் குதிரை வாகனத்தில் வீதி உலா காவடியுடன் வலம் வந்த பக்தர்கள்
தேனியில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அல்லிநகரம் வீரப்ப அய்யனார் குதிரை வாகனத்தில் வீதி உலா நடந்தது. திரளான பக்தர்கள் காவடியுடன் வந்து வழிபாடு செய்தனர்.
தேனி அல்லிநகரம் மலைக்கோயில் வீரப்ப அய்யனார் கோயில் சித்திரை திருவிழா ஆண்டு தோறும் கோலாகலமாக நடப்பது வழக்கம். இத்திருவிழாவை முன்னிட்டு நேற்று அல்லிநகரம் கோயிலில் இருந்து சுவாமி குதிரை வாகனத்தில் பெரியகுளம் ரோடு, மதுரை ரோடு வழியாக ஊர்வலமாக பங்களாமேடு சோலைமலை அய்யனார் கோயிலுக்கு செல்லும் வீதிஉலா நடந்தது.
வழிநெடுகிலும் பக்தர்கள் தேங்காய் உடைத்தும், அபிஷேகம் செய்தும் வழிபட்டனர். அல்லிநகரம் கோயிலில் இருந்து காவடி சுமந்து வந்த, பக்தர்கள் சுவாமியுடன் ஊர்வலமாக சென்றனர். இன்று அல்லிநகரம் கோயிலில் இருந்து மலைக்கோயிலுக்கு சுவாமி ஊர்வலமாக சென்ற பின், மலைக்கோயிலில் வீரப்ப அய்யனாருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஹிந்துசமய அறநிலையத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.