பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் மெட்ரிக் மாணவர்கள் சாதனை
கம்பம் சக்தி விநாயகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2, 10ம் வகுப்பு பொது தேர்வுகளில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் தொடர்ந்து அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்து வருகின்றனர்.
இப்பள்ளியின் சார்பில் தேர்வு எழுதிய 70 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.
பிளஸ் 2 பொது தேர்வில் சுவாமிநாதன் 600 க்கு 588 மதிப்பெண் பெற்று முதலிடத்தை பிடித்தார்.
அனிஷ்வந்த் 585 மதிப்பெண் பெற்று 2வது இடத்தையும், பாண்டீஸ்வரன் 578 மதிப்பெண் பெற்று 3வது இடம் பிடித்தார்.
550 மதிப்பெண்களுக்கு மேல் 17 பேர்களும், 500க்கு மேல் 36 பேர்களும் பெற்று, சாதனை படைத்துள்ளனர்.
உயிரியல் பாடத்தில் 9 பேர், கணிதத்தில் 5, வேதியியலில் 4, கம்ப்யூட்டர் அறிவியலில் 2, கம்ப்யூட்டர் அப்ளிகேசன், வணிகவியல், கணக்கு பதிவியில், தமிழ் ஆகிய பாடங்களில் தலா ஒருவரும் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றனர்.
சாதனை மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளர் அச்சுத நாகசுந்தர் பாராட்டி, பரிசுகள் வழங்கினார்.
முதல்வர் கருப்பசாமி, இருபால் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.