பள்ளி மாணவிகளை பின் தொடரும் ரோமியோக்கள்: அச்சத்தில் பெற்றோர்கள்
கூடலுார்: கூடலுாரில் பள்ளி செல்லும் மாணவிகளை பின்தொடர்ந்து செல்லும் ரோமியோக்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.
கூடலுார் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவிகள் தினந்தோறும் காலை, மாலையில் நெடுஞ்சாலையில் நடந்து வரும்போது டூவீலர்களில் உலா வரும் ரோமியோக்கள் தொந்தரவு கொடுத்து வருகின்றனர். இதில் சிலர் முக்கிய சந்திப்பில் நின்று கடந்து செல்லும் மாணவிகளை கிண்டல் செய்து வருகின்றனர்.
ஒரு சில மாணவிகள் தங்களது வீட்டில் பெற்றோர்களிடம் தெரிவிக்கின்றனர். மற்றவர்கள் பயத்தில் இதை மறைத்து விடுகின்றனர். தற்போது தேர்வு காலம் என்பதால் மாணவிகள் படிப்பில் ஒரே கவனத்துடன் சென்று வருகின்றனர். இதில் இந்த ரோமியோக்கள் அவர்களின் கவனத்தை திசை திருப்பி தொந்தரவு கொடுப்பதால் பெற்றோர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். பெட்ரோல் பங்க், பஸ் ஸ்டாண்ட், காமாட்சியம்மன் கோயில் தெரு, பொம்மச்சி அம்மன் கோயில் தெரு, மாநில நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து செல்ல வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.