கும்பக்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
தொடர் விடுமுறை தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு கும்பக்கரை அருவியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
பெரியகுளம் அருகே 8 கி.மீ., துாரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது.
கொடைக்கானல் மலைப் பகுதி பாம்பார்புரம், வட்டக்காணல், வெள்ளகெவி பகுதியில் பெய்யும் மழை, கும்பக்கரை அருவி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்யும் மழையால் கும்பக்கரை அருவிக்கு தண்ணீர் வருகிறது. ஏப்.4ல் மழையால் அதிகளவு தண்ணீர் வந்தது.
தற்போதும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கோடை வெயில் தொடர் விடுமுறை, நேற்று தமிழ்ப் புத்தாண்டு தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்துச் சென்றனர்.