Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

சுகாதாரம் பாதிப்பு ஊராட்சிகளில் பணியாளர்கள் பற்றாக்குறை

போடி: ஊராட்சிகளில் தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறையால் சுகாதாரப் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

தேனி மாவட்டத்தில் 130 ஊராட்சிகள் உள்ளன. பல ஊராட்சிகளில் சுகாதாரப் பணியாளர்கள் அதிகளவில் பற்றாக்குறை உள்ளது. பணிபுரியும் சிலரும் வயதானவர்களாக உள்ளனர்.

இவர்களுக்கு வழங்கப்படும் சம்பளமும் குறைவு என்பதால் பணிபுரிய ஆர்வம் இன்றி உள்ளனர்.

பல ஆண்டுகளாக தூய்மை பணியாளர்கள் நியமனம் செய்யப்படாததால் ஊராட்சி பகுதியில் அகற்றாத சாக்கடை கழிவுகள் அதிகரித்து, துப்புரவு பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.

சுகாதாரம் பாதிப்பினால் சில ஊராட்சிகளில் தினக்கூலி அடிப்படையில் தூய்மை பணியாளர்களாக நியமனம்செய்து, துப்புரவு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே நிலை பேரூராட்சிகளிலும் நீடித்து வருகிறது. மாவட்டத்தில் ஊராட்சிகளை சுதாதாரமானமுறையில் பராமரிக்க தூய்மை பணியாளர்களுக்கான காலிப் பணிஇடங்களை நிரப்பிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *