போலீஸ் செய்திகள்.. .
தேனி: போடி தேனி மெயின் ரோடு மாரியம்மன் கோயில்பட்டி அருகே பின்பக்கத் தலையில்ரத்தக்காயம், வலது கால் முறிந்த நிலையில் 50 வயதுள்ள ஆண்,விபத்தில் சிக்கிஇறந்து கிடந்தார். வீரபாண்டி வி.ஏ.ஓ., அன்னபூரணி புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் உடலை மீட்டு தேனி அரசுமருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரிக்கின்றனர்.மின்சாரம் தாக்கி காற்றாலை பராமரிப்பாளர் பலி
தேனி: திருத்துரைப்பூண்டி தாலுகா பவித்திரன் 28. இவர் நாகலாபுரம் முதல் பாலகிருஷ்ணாபுரம்ரோட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான காற்றாலையை கடந்த 4 ஆண்டுகளாக பராமரித்து வந்தார். நவ.20ல் வார பராமரிப்பு செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு தேனிஅரசு மருத்துவக்கல்லுாரியில் சிகிச்சை செய்து பின் மதுரை தனியார்மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். நேற்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.