கூடைப்பந்து பயிற்சி முகாம் வீரர், வீராங்கனைகளுக்கு அழைப்பு
பெரியகுளத்தில் கோடைகால கூடைப்பந்து இலவச பயிற்சி முகாமிற்கு வீரர்கள், வீராங்கனைகளுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
பெரியகுளம் சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் சிதம்பர சூரியவேலு கூறியதாவது: பெரியகுளம் சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் ஆண்டு தோறும் கோடைகால கூடைப்பந்து பயிற்சி முகாம் நடத்தி வருகிறது. இந்தாண்டு பயிற்சி ஏப்.25 காலை 6:30 மணிக்கு, கச்சேரி ரோடு பி.எஸ்.டி., நினைவு விளையாட்டரங்கில் துவங்க உள்ளது. இதில் பங்கேற்கும் வீரர்கள், வீராங்கனைகள் பயிற்சி துவங்குவதற்கு முன் வந்து பதிவு செய்து பயன் பெறலாம்., என்றார்.