Sunday, July 20, 2025
மாவட்ட செய்திகள்

பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட நிர்வாகிகள் தேர்தல்

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளிகள் பட்டதாரி ஆசிரியர்கழகம் சார்பில், தேனி மாவட்ட புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் சக்கம்பட்டி தனியார் திருமண மண்டபத்தில்நடந்தது.

புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கு இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் தேர்தலில், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் பிரான்சிஸ் பிரிட்டோ தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுஇருந்தார்.

தேனி மாவட்டத்தின் புதிய தலைவராக கொண்டமநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் மோகன், மாவட்டச் செயலாளராக ஆண்டிபட்டி அரசுபெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மலைச்சாமி, பொருளாளராக கம்பம் முத்தையாபிள்ளை நினைவு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சீனிவாசன், மாவட்ட மகளிர்அணி செயலாளர்களாக பெரியகுளம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை சத்திய தீபா, பண்ணைப்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ஷாகினா, பல்வேறு நிர்வாக குழுவினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதியான புதிய பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழையஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்தவேண்டும், நிறுத்தி வைக்கப் பட்டுள்ளசரண்டர் – ஈட்டிய விடுப்பு ஊதியத்தை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *