Tuesday, May 6, 2025
மாவட்ட செய்திகள்

இடம் பத்திரப்பதிவு செய்து தருவதாக ரூ.7 லட்சம் மோசடி: 6 பேர் மீது வழக்கு

ஆண்டிப்பட்டி ரங்கசமுத்திரத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் மனைவி அக்ஷயா 28. இவரிடம் சிவகாசி அருகே நாராயணபுரத்தை சேர்ந்த பரசுராம், கணேசன், பழனிராஜ், பாப்பையா, மாரிச்செல்வம், விஜயராஜ் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான 26 சென்ட் இடத்தை பத்திரப்பதிவு செய்து தருவதாக, உடன்படிக்கை செய்தனர்.

இதன் அடிப்படையில் ரூ.5 லட்சம், நிலம் பழுது பார்க்கும் செலவுக்கு ரூ.1 லட்சம், பட்டா மாற்றும் செலவிற்கு ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.7 லட்சம் பெற்றுள்ளனர்.

ஆனால் உடன்படிக்கையின் படி நிலத்தை பத்திரப்பதிவு செய்து தராமல், வேறு நபருக்கு கிரயம் செய்து கொடுத்து விட்டனர்.

இதுகுறித்து அக்ஷயா தேனி எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார்.

எஸ்.பி., உத்தரவில் ஆண்டிபட்டி போலீசார் பரசுராம், கணேசன், பழனிராஜ், பாப்பையா, மாரிசெல்வம், விஜயராஜ் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *