ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த 10.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது
தேனி, பிப். 1:தேனி போ லீஸ் சப்.இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் நேற்றுமுன்தினம் இரவு தேனி புதிய பஸ்நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதிய பஸ்நிலையத்தில் போடி பஸ்கள் நிற்கும் பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்றிருந்த இருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணமாக பதிலளிக்கவே, தீவிர விசாரணைக்குட் படுத்தப்பட்டனர்.
இதில் சந்தேகப்படும்படியாக இருந்த 2 பேரிடம் சுமார் 10.5 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.இதுகுறித்து போலீசார் விசாரிக்கையில், பிடிபட்டவர்கள் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே பச்சைமலையான்கோட்டையை சேர்ந்த பாண்டி மகன் நடராஜன்(48) மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஒட்டன்சத்திரம் அருகே தங்கச்சியம்மாள்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் மகன் அழகர்சாமி(20) எனத் தெரியவந்தது.
இதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசர் இருவரையும் தேனி போரலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்தபோது, ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஜெயபால் என்பவர் பணம் கொடுத்து ஆந்திராவிற்கு சென்று ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியை சேர்ந்த செல்லாராவ் என்பவரிடம் இருந்து கஞ்சா வாங்கி வரச்சொன்னதையடுத்து, இருவரும் ஆந்திரா சென்று கஞ்சா வாங்கி வந்ததாக தெரிவித்தனர். இதனையடுத்து, தேனி போலீசார் நடராஜன், அழகர்சாமி, ஜெயபால், செல்லராவ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, நடராஜன், அழகர்சாமி ஆகியோரை கைது செய்தனர்.