கோடை கால கலை பயிற்சிகளில் பங்கேற்கலாம்
கலை பண்பாட்டுத்துறை சார்பில் 6 முதல் 16 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு கோடை கால பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
மாவட்டத்தில் இத்துறை சார்பில் ஜவஹர் சிறுவர் மன்றம் சார்பில் சிலம்பம், பரதம், ஓவிய பயிற்சிகள் இன்று (மே 6) முதல் மே 25 வரை பழனிசெட்டிபட்டி இந்து நாடார் உறவின்முறை ஆர்.எஸ்., நர்சரி, பிரைமரி பள்ளியில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் 88703 40186 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.