வருவாய்த்துறை ஆர்ப்பாட்டம்
தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், ஆண்டுதோறும் ஜூலை 1ம் நாளை (பசலி ஆண்டின் துவக்கம்) வருவாய்த்துறை தினமாக அறிவிக்க வேண்டும்.
வருவாய், பேரிடர் மேலாண்மை, நில அளவைத்துறைகளில் அனைத்து அலுவலர்களின், உயிர் உடைமைகளை காக்கும் விதமாக சிறப்பு பணி பாதுகாப்புச் சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருமணி நேர வெளிநடப்பு, மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டச் செயலாளர் சுரேந்திரன் தலைமை வகித்தார்.
மாவட்டப் பொருளாளர் சதீஸ்குமார் முன்னிலை வகித்தார்.