இந்திய ராணுவ வீரர்களுக்கு சல்யூட்; சலுகையை அறிவித்தது ஏர் இந்தியா நிறுவனம்
ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் இந்திய ராணுவத்தினருக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
26 இந்தியர்களை கொன்று குவித்த பஹல்காம் தாக்குதலுக்கு, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்துள்ளது. சுமார் 25 நிமிடங்கள் நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதலில், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளின் 9 கூடாரங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையில், இந்திய பாதுகாப்பு படையினரின் இந்த வீரதீர செயலை கவுரவிக்கும் விதமாக, ஏர் இந்தியா நிறுவனம் சில சலுகையை அறிவித்துள்ளது.
ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் மே 31ம் தேதி வரை பயணிப்பதற்கான முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுக்களை, இந்திய பாதுகாப்பு படையினர் ரத்து செய்தால், 100 சதவீத பணம் திரும்பி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஜூன் 30 வரையில் எந்தவித கட்டணமும் இன்றி ஒருமுறை பயண நேரத்தை மாற்றியமைக்கும் சலுகையும் வழங்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.