வீரபாண்டி சித்திரை திருவிழா திரளாக பங்கேற்ற பக்தர்கள்
வீரபாண்டி சித்திரைத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நேற்று முன்தினம் கோலாகலமாக துவங்கியது. கோயில் வீட்டில் இருந்து ஊர் கோயிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பக்தர்கள் பலரும் முளைப்பாரி எடுத்து வந்தனர். அம்மன் ஊர்வலத்தில் பல்வேறு இடங்களில் நடந்த மண்டகப்படியில் பக்தர்கள் பூஜை செய்து வழிபட்டனர். இன்று இரவு புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதி உலா நடக்க உள்ளது. இரவு நேரங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் வருவதால், பாதுகாப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன.