Wednesday, May 14, 2025
இந்தியா

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக ஜெய்சங்கர் உள்ளார். இவர் 1977ல் இந்திய வெளியுறவுத் துறையில் சேர்ந்தார். 1985ம் ஆண்டு முதல் 1988ம் ஆண்டு வரை மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றினார்.

தற்போது, குண்டு துளைக்காத கார் மூலம் ஜெய்சங்கரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள அவரது வீட்டைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. ஜெய்சங்கருக்கு ஏற்கனவே மத்திய ரிசர்வ் போலீஸ் படை கமாண்டோக்களால் வழங்கப்படும் Z-பிரிவு பாதுகாப்பு உள்ளது. 24 மணி நேரமும் அவரைப் பாதுகாக்க 33 கமாண்டோக்கள் கொண்ட குழு நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது ஜெய்சங்கருக்கு பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு எல்லையில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்த நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என டில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *