நிவாரணம்: கலெக்டர் பாராட்டு
தேனி : பெஞ்சல் புயல், கனமழையால் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார் மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் சார்பில் ரூ.15 லட்சம் மதிப்பிலான போர்வை, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விழுப்புரம் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டன.
நிவாரணப்பொருட்கள் வழங்கிய தனியார் நிறுவன நிர்வாகிகள், பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகளை நேரில் அழைத்து கலெக்டர் ஷஜீவனா பாராட்டினர்.