மக்கள் குறைதீர் கூட்டம்
தேனி, மார்ச் 11: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்தார். டிஆர்ஓ மகாலட்சுமி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் 230 மனுக்களை அளித்தனர். முன்னதாக, மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தலா ரூ.16 ஆயிரத்து 199 மதிப்பிலான ஸ்மார்ட் போன்களை 7 பேருக்கு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் காமாட்சி, மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிச்செல்வி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) முத்துமாதவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.