கம்பம் கவிஞர் அகில இந்திய குடியரசு தின கவியரங்கிற்கு தேர்வு
கம்பம்,: அகில இந்திய அளவில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெறும் கவியரங்கு கம்பம் பாரதி இலக்கிய பேரவை தலைவர் பாரதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு அகில இந்திய வானொலி ஆண்டுதோறும் இந்திய மொழிகளில் இருந்து கவிதைகளை வரவேற்று, அதில் சிறந்ததை தேர்வு செய்து குடியரசு தினத்திற்கு முன்னதாக ஒலிபரப்புவார்கள். இதில் தமிழகத்தில் இருந்து கம்பம் பாரதி இலக்கிய பேரவை தலைவர் கவிஞர் பாரதன் எழுதிய ‘வியர்வை துளி’ என்ற கவிதை தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஜன 18 ல் மும்பையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு முன்னிலையில் நடைபெறும் கவியரங்கில் கவிஞர் பாரதன் கவிதையை வாசிக்கிறார்.
கவிஞர் பாரதன் கூறுகையில், அகில இந்திய அளவில் 22 மொழிகளில் கவிஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மொழிக்கும் ஒருவர். இந்தி மொழிக்கு மட்டும் இருவர். தமிழ் மொழிக்கு எனது கவிதை தேர்வு செய்யப்பட்டுள்ளது. குடியரசு தினத்திற்கு முதல் நாள் அகில இந்திய வானொலியில் அனைத்து சேனல்களிலும் இந் நிகழ்ச்சி ஒலி பரப்பாகும் என்றார்.