அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தேனி கலெக்டர் அலுவலகம் முன் அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில்,’ பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தொழில்நுட்ப ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., திட்டத்தை கைவிட வேண்டும்,’ உள்ளிட்ட 29 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் உடையாளி தலைமை வகித்தார். மாநிலதுணைத்தலைவர் முகமது அலி ஜின்னா, மாநில தணிக்கையாளர் முருகன், மாவட்ட செயலாளர் சென்னமராஜ், பொருளாளர்முகமது ஆசிக், துணைத்தலைவர் கிருபா, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தங்கமீனா, அங்கன்வாடி பணியாளர்,உதவியாளர் சங்க மாநில செயலாளர் தேன்மொழி, மக்கள்நலப்பணியாளர் சங்க நிர்வாகி தீன்அப்துல்லா உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.