Wednesday, April 16, 2025
மாவட்ட செய்திகள்

சிலம்ப போட்டியில் தேனி மாணவர்கள் 6 பேருக்கு தங்கப்பதக்கம்

கோவாவில் நடந்த சர்வதேச ஒற்றைக் கம்பு சிலம்பம் போட்டியில் தேனி மாவட்டத்தை சேர்ந்த 6 மாணவர்கள் தங்கம், 2 மாணவர்கள் வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளனர்.

நேஷனல் யூத் ஸ்போர்ட்ஸ் அண்ட் எஜுகேஷன் பெடரேஷன் சார்பில் கோவாவில் சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி ஆகஸ்ட் 24,25, 26 தேதிகளில் நடந்தது. தேனி மாவட்ட அமச்சூர் கிக் பாக்சிங் அசோசியேசன் கீழ் இயங்கும் ஏ.வி.எம்., சிலம்பக் கூடத்தில் பயின்ற மாணவர்கள் 8 பேர் போட்டியில் பங்கேற்றனர். அமச்சூர் கிக் பாக்சிங் அசோசியேசன் செயலாளர் துரைமுருகன் கூறியதாவது: கோவாவில் நடந்த சர்வதேச போட்டியில் இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மலேசியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 1400 பேர், ஒற்றைக்கம்பு, இரட்டைக் கம்பு, சுருள் வாள், குத்துவரிசை, மான்கொம்பு உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றனர். ஏ.வி.எம்., சிலம்பம் கூடத்தில் பயின்ற 14 வயதிற்குட்பட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த யாழ்மொழி, வைஷாந்த் கிருஷ்ணா, சசிதரன் சிவசுப்பிரமணி, முத்துக்கனி, சம்யுக்தா ஆகிய 6 மாணவர்கள் தங்கப்பதக்கம், மாணவர்கள் நித்திஷ் குமார், தருண் கார்த்திக் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

கன்னியப்பபிள்ளை பட்டியில் உள்ள அமச்சூர் கிக் பாக்சிங் பயிற்சி மையத்தில் நடந்த பாராட்டு விழாவில் செயலாளர் துரைமுருகன், பயிற்சியாளர்கள் ஆனந்தவேல்முருகன், ஜெயவேல், வர்த்தக பிரமுகர் திருமுருகன், போடி ஆர்.எம்.டி.சி.கிளை மேலாளர் பாண்டியராஜன் உட்பட பலர் வாழ்த்தினர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *