தங்க தமிழ் செல்வன் வருகையால் தேனி திமுக வின் கோட்டையாக மாறுகிறதா…? அதிமுக வரலாற்றில் டெபாசிட் தேனியில் காலி…ஏன் இந்த தோல்வி…?
தங்க தமிழ் செல்வன் வருகையால் தேனி திமுக வின் கோட்டையாக மாறுகிறதா…? அதிமுக வரலாற்றில் டெபாசிட் தேனியில் காலி…ஏன் இந்த தோல்வி…?
தமிழக அரசியலில் தோல்வி கண்டாலும் தொடர்ந்து மக்களுக்காக பயணிக்கும் போது மக்களின் அங்கீகாரம் நிச்சயம் கிடைத்தே தீரும். அது அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் பொருந்தும். காங்கிரசைய் வீழ்த்த கருணாநிதி எடுத்த முயற்சி அதை வீழ்த்தி ஆட்சி கட்டிலில் அமர்த்தியது. அவரை வீழ்த்த எம். ஜி.ஆர்.எடுத்த முயற்சி அவரையும் ஆட்சியில் 10 வருடம் உட்கார வைத்தது. அதன் பிறகு தொடர்ந்து முயற்சியால் கருணாநிதியும் ஆட்சியில் அமர்ந்தார். அதன் பிறகு அவரை வீழ்த்த ஜெயலலிதா தொடர்ந்து அரசியலில் முயற்சித்தார் அவரும் ஆட்சியில் அமர்ந்தார். கருணாநிதி அவர்களுக்கு பிறகு ஸ்டாலின் தொடர்ந்து அரசியலில் பயணம் அவரையும் முதல்வராக ஆக்கியுள்ளனர் மக்கள். அதே போல் கடந்த 10 வருடங்கள் தொடர் புறகணிப்பு தோல்வி என எது கண்டாலும் தங்க தமிழ் செல்வன் அவர்களின் விடா முயற்சி அரசியலுக்கு மக்கள் நம்பிக்கை கொடுத்து பெரு வாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்துள்ளனர்.
தேனி அரசியல் எப்போதும் அதிமுகவுக்கு சாதகமாவே இருக்கும். அதற்கு எம். ஜி.ஆர்.முதல் ஜெயலலிதா வரை தேனியில் நேரடியாக போட்டியிட்டு வென்றதுதான்.அந்த கோட்டையின் காவலில் ஒருவராக விளங்கியவர் தங்க தமிழ் செல்வன்.அவரை திமுக அழைத்ததும் அவரும் சென்றது திமுக வின் பலமாகமாறி மாறி விட்டது.
தங்க தமிழ் செல்வன் தேனி அரசியலும்… ஸ்டாலின் முக்கியத்துவம் ஏன்…?
தேனி அரசியலில் தேனீ யை போல சுறுசுறுப்பா இயங்க கூடிய அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர். மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளில் இவருக்கு தனி செல்வாக்கை உருவாக்கி உள்ளார். பெரும்பாலும் அதிமுக வின் கோட்டையாக தேனி இருக்க முக்கிய காரணம் முக்குலத்தோர் வாக்கு வங்கி. அந்த வாக்கு வங்கியை சரியாக உடைக்க முடியாமல் போனதுதான் திமுக வின் பெருமளவு தோல்விக்கு காரணம். கடந்த முறை தமிழகம் முழுவதும் வென்ற திமுக தேனியில் தோற்றத்துக்கு கூட இதுதான் காரணம். இந்த முறை தங்க தமிழ் செல்வன் வருகையால் முக்குலத்தோர் வாக்கு வங்கி கணிசமான அளவில் மாறியதுதான் தற்போது கிடைத்த பிரம்மாண்ட வெற்றிக்கு முக்கிய காரணம். ஐம்பது ஆண்டு அரசியல் களத்தில் அதிமுக டெபாசிட் இழந்தது இதுவே முதல் முறை. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் தங்க தமிழ் செல்வன்.
இந்த பகுதியில் முக்குலத்தோர் வாக்கும் பெரும்பான்மை சமூகத்தில் நன்மதிப்பும் பெற்று இருப்பதால், ஸ்டாலின், இவர் வந்தது முதல் மாவட்ட செயலாளர் ஆக்கியதுடன், தற்போதும் இவருக்கு மக்களவை உறுப்பினராக வாய்ப்பு கொடுத்து உள்ளார். ஸ்டாலின் அவர்களின் நம்பிக்கையை அவரும் நிலை நிறுத்தியுள்ளார். தேனி அதிமுக வின் கோட்டை என்பதை மாற்றி திமுக வின் கோட்டையாக மாற்றியுள்ளார்.
அதிமுக வரலாற்றில் தேனியில் டெபாசிட் காலி ஏன்..?
தேனி அதிமுக வின் கோட்டை என விளங்கிய தேனி இப்போது டெபாசிட் காலி ஆகி இருப்பது பெரும் அதிர்ச்சிக்கு உரிய விசயம் ஆகும். அரசியல் அறியாத முட்டாள்கள் அடிக்கடி பேசுவது மக்கள் பணத்திற்கு ஓட்டு போடுகிரார்கள் என்று. மக்கள் பணத்திற்கு ஓட்டு போடுகிறார்கள் என்றால் காங்கிரஸ் வீழ்த்திய போது கருணாநிதி கைகளில் பணம் இருந்திருக்குமா? அல்லது கருணாநிதி அவர்கள் வீழ்ந்த போது எம்.ஜி.ஆர் பணம் தந்தாரா ? நிச்சியம் கிடையாது. இங்கு மக்களின் மனங்களில் நம்பிக்கையை எவர் பெறுகிறார்களே அவர்கள் தான் அரசியலில் வெற்றி பெறுகிறார்கள். அதிமுக சமீப காலமாக தொண்டர்கள் மன நிலையில் யோசிக்காமல் பணம் இருப்பவன் பின்னால் சென்றதால் தான் இந்த தோல்வி. அதிமுக வில் தேனியில் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர் கட்சிக்கு உழைத்தவர் என்பது பார்ப்பது மறக்ககபட்டு பணம் உள்ளவனா என்று பார்த்தது அதிமுக வின் டெபாசிட் காலி ஆனதுக்கு முக்கிய காரணம்.