தேனி -மதுரை ரோட்டில் பிப்.,16 முதல் போக்குவரத்து மாற்றம்
தேனி: தேனியில் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெறும் பகுதியில் பிப்.,16 முதல் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வருவதாக கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளா
தேனி நகர்பகுதியில் மதுரை ரோட்டில் அரண்மனைப்புதுார் விலக்கு முதல் சிப்காட் அருகே உள்ள தனியார் பள்ளிவரை ரயில்வே மேம்பால பணிகள் நடந்து வருகிறது.
இப்பணியை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் செய்து வருகின்றனர்.
தற்போது ரயில்வே கேட்டில் இருந்து அரசு ஐ.டி.ஐ., வரை இருபுறமும் வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த ரோட்டில் பிப்.,16 முதல் அரசு ஐ.டி.ஐ., முதல் ரயில்வே கேட் வரையிலான மதுரைரோடு ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. இதில் மதுரை ரோட்டில் இருந்து தேனிக்கு வரும் வாகனங்கள் மட்டும் செல்லலாம்.
தேனியில் இருந்து மதுரை செல்லும் வாகனங்கள் கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்ட், திட்டசாலை, அரசு ஐ.டி.ஐ., வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேம்பால பணியில் இடையூறுகளை தவிர்க்க ஒருவழிபாதை அமல்படுத்தப்படுவதாக கலெக்டர் தெரிவித்தனர்.