காமராஜர் பிறந்தநாள் விழா
தேனி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத்தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார்.துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர்.
பள்ளி செயலாளர் பாண்டிக்குமார் வரவேற்றார். மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆதரவற்ற மாணவர்களக்கு சீருடை வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியை காஞ்சனாதேவி மற்றும்ஆசிரியர்கள் விழாவை ஒருங்கிணைத்தனர்.
சண்முகசுந்தரபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு தொடக்க கல்வி டி.இ.ஓ., ஜான்சன் தலைமை வகித்தார்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சரவணன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.