மரக்கன்று நடும் விழா
போடி: போடி அருகே சில்லமுத்துப்பட்டி கால்நடை மருத்துவமனை வளாகத்தில் கால்நடை பராமரிப்பு, வனத்துறை, சில்லமரத்துப்பட்டி ஊராட்சி, நல்லோர் வட்டம், போடி லயன்ஸ் சங்கம் சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் கோவில் ராஜா தலைமை வகித்தார்.
உதவி இயக்குநர்கள் சிவரத்னா, பாஸ்கரன், கால்நடை மருத்துவர்கள் தினோ சுதர்சன், நந்தினி, சண்முகசுந்தரம், நல்லோர் வட்ட பொறுப்பாளர்கள் குறிஞ்சி மணி, ஜெயக்குமார், சில்லமரத்துப்பட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் வனிதா, ஏ.எச்.எம்.டிரஸ்ட் நிர்வாக இயக்குநர் முகமது சேக் இப்ராஹிம் முன்னிலை வகித்தனர்.
வளாகத்தில் புங்கன், பாதாம், மகாகனி, குமிழ், கடம்பு, பனை உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.
விழாவில் இயற்கை விவசாய மாநில பொறுப்பாளர் நாட்ராயன், பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் துக்கையண்ணன், போடி லயன்ஸ் சங்க தலைவர் நவநீதகிருஷ்ணன், வனவர் ராமகிருஷ்ணன், பசுமை பங்காளர் அமைப்பு நிறுவனர் பனை முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.