அரசு பள்ளியில் புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடம்: முதல்வர் காணொலி காட்சியில் திறந்து வைத்தார்
தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி அரசு மாதிரிமேல்நிலைப்பள்ளி புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். சில்வார்பட்டி அரசு மாதிரிமேல்நிலைப்பள்ளியில் 2021-2022 ஆம் ஆண்டு நபார்டு வங்கி மூலம் ரூ.6கோடியே 72லட்சம் மதிப்பில் புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி மூலம் நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பெரியகுளம் எம்எல்ஏ சரவணக்குமார் குத்துவிளக்கேற்றி வைத்தார். புதிய 32 வகுப்பறைகள், இரண்டு அறிவியல் ஆய்வகம் உள்ளிட்டவைகள் நேற்று திறந்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
நிகழ்ச்சியில் பெரியகுளம் யூனியன் சேர்மன் தங்கவேலு, திமுக பெரியகுளம் ஒன்றிய செயலாளர் எல்எம்.பாண்டியன், தேனி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை உதவி திட்ட அலுவலர் மோகன், சில்வார்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர் பாண்டியன், மாவட்ட ஊராட்சிகளின் துணைத்தலைவர் ராஜபாண்டி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுப்பையாபிள்ளை, பொறுப்பாளர் ராஜமாணிக்கம், திமுக ஒன்றிய துணைச் செயலாளர் வெங்கடாச்சலம் மற்றும் பொதுமக்கள், மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.