தமிழ் பெயர் பலகையை தவிர்க்கும் அரசு அதிகாரிகள்
தேனி; அரசு வாகனங்களில் தமிழில் பெயர் எழுதுவதை தவிர்த்து ஆங்கிலத்தில் மட்டும் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. அதிகாரிகளின் வாகனங்களிலும் தமிழில் எழுத அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசின் கீழ் வருவாய்த்துறை, மருத்துவத்துறை, கருவூலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உட்பட 46க்கும் மேற்பட்ட அரசு துறைகள் செயல்படுகின்றன.
ஒவ்வொரு துறையிலும் உயர் அதிகாரிகள் பயணம் செய்ய அரசு சார்பில் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதில் அதிகாரியின் பொறுப்பினை குறிப்பிட்டு அல்லது துறையினர் பெயரை குறிப்பிட்டு பெயர் பலகை வைக்கப்படுகிறது. மாவட்டத்தில் இயங்கும் பல்வேறு அரசு துறை உயர் அதிகாரிகளின் வாகனங்களில் ஆங்கிலத்தில் மட்டுமே பெயர் பலகை காணப்படுகிறது.குறிப்பாக வனத்துறை, நகராட்சி கமிஷனர்கள், ஊரக வளர்ச்சித்துறை வாகனங்களின் முன்பகுதியில் ஆங்கில பெயர் பலகையுடன் வலம் வருகின்றன. தமிழில் பெயர் பலகை அமைக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கோரியுள்ளனர்