Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

120 ஆண்டுகளில் முதன் முறையாக ராயப்பன்பட்டி பனிமயமாதா சர்ச்சில் மரத்தேர் வெள்ளோட்டம்

தேனி மாவட்டம் ராயப்பன்பட்டியில் 123 ஆண்டுகளில் முதன் முறையாக மரத்திலான தேர் புதிதாக உருவாக்கப்பட்டு, பனிமய மாதா சர்ச் தேரோட்டம் அடுத்த மாதம் நடைபெறுவதை முன்னிட்டு தேர் வெள்ளோட்டம் நேற்று காலை நடந்தது.

தென் மாவட்டங்களில் உள்ள சர்ச்களில் ராயப்பன் பட்டி பனிமய மாதா சர்ச் மிகவும் பழமையானது. பிரசித்தி பெற்றது. 1902 ல் கட்டப்பட்டது. இந்த சர்ச்சில் உள்ள வெண்கல மணி ஆயிரம் கிலோ எடை கொண்டது. பிரான்ஸ் நாட்டில் இருந்து, இறக்குமதி செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் பனிமய மாதா சர்ச்களில் ஆகஸ்ட்டில் அன்னை தேர்ப்பவனி நடைபெறும். தமிழகத்தில் தூத்துக்குடி பனிமய மாதா சர்ச் தேர்ப்பவனி மரத்திலான தேரில் நடைபெறும். மற்ற ஊர்களில் சப்பரத்தில் டிராக்டரில் நடைபெறும். ராயப்பன் பட்டியில் இதுவரை மாதா ஊர்வலம் சப்பரத்தில் வைத்து டிராக்டர் மூலம் நடைபெற்று வந்தது. தற்போது ரூ.40 லட்சம் செலவில் 29 அடி உயரத்தில் 7 டன் எடையுள்ள மரத்திலான தேர் புதிதாக செய்யப்பட்டுள்ளது.

நேற்று தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. பங்குத் தந்தை ஞானப்பிரகாசம் வெள்ளோட்டத்தை துவக்கி வைத்தார். கிராம கமிட்டி தலைவர் பிரபாகர், கிராம கமிட்டி நிர்வாகிகள் பொது மக்களும் பங்கேற்றனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து சர்ச்சை அடைந்தது. இந்த தேர் வெள்ளோட்டத்தில் திரளாக பொது மக்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *