பிறரிடம் அன்பு காட்டுவது முக்கியம் என கூறி குழந்தைகளை வளர்க்கனும் ஆர்.எஸ்.எஸ்., மாநில தலைவர் பேச்சு
பிறரிடம் அன்பு காட்டுவது முக்கியம் என கூறி குழந்தைகளை வளர்க்க வேண்டும் என பள்ளி விழாவில் ஆர்.எஸ்.எஸ்., மாநில தலைவர் ஆடலரசன் பேசினார்.
தேனியில் லைப் இன்னவேஷன் பள்ளியில் நடந்த தாத்தா பாட்டி விழாவிற்கு ஆர்.எஸ்.எஸ்., மாநில தலைவர் ஆடலரசன் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் நாராயணபிரபு முன்னிலை வகித்தார்.
விழாவில் பள்ளி மாணவர்கள் தங்களது தாத்தா, பாட்டிக்கு பாதபூஜை செய்து ஆசி பெற்றனர். ஆர்.எஸ்.எஸ்., மாநில தலைவர் பேசியதாவது:
தாத்தா, பாட்டியிடம் பாதபூஜை செய்து ஆசிர்வாதம் செய்வது இயல்பானது. தற்போது கடைபிடிப்பதில்லை.
பிறரிடம் அன்பு காட்டுவது முக்கியம் என கூறி குழந்தைகளை வளர்க்க வேண்டும். அன்பை விட உயர்ந்தது இல்லை.
இன்றைய சூழலில் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடைவெளி அதிகரித்து வருகிறது. அதை விட தாத்தா, பாட்டிக்கும் பேரகுழந்தைகளுக்கும் இடைவெளி அதிகரித்துள்ளது. தற்போது உள்ள டெக்னாலஜியிடம் மனம் விட்டு பேச இயலாது.
தாத்தா, பாட்டி இருந்தால் அவர்களிடம் குழந்தைகள் மனம் விட்டு பேசுவர்.
குழந்தைகளுடன் உணவு சாப்பிடுங்கள். கோயில்களுக்கு அழைத்து செல்லுங்கள். என்றார்.தொடர்ந்து விழாவில் பங்கேற்ற தாத்தா, பாட்டிகளுக்கு போட்டிகள் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.