கிளை சிறையில் சப் -ஜட்ஜ் ஆய்வு
உத்தமபாளையம் கிளை சிறைச்சாலையில் நேற்று தேனி சப் -ஜட்ஜ் கீதா திடீர் ஆய்வு மேற்கொண்டு கைதிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
உத்தமபாளையம் கிளை சிறைச் சாலை ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது.
இங்கு விசாரணை கைதிகள் 29 பேர் உள்ளனர். நேற்று தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலர் மற்றும் தேனி சப்- ஜட்ஜ் கீதா, கிளை சிறைச்சாலைக்கு திடீர் விசிட் செய்தார். கைதிகள் அடைக்கப்பட்ட அறைகள், பாத்ரூம், கழிப்பறை, சமையலறை உள்ளிட்ட அறைகளை ஆய்வு செய்தார். பின்னர் கைதிகளிடம் சாப்பாடு, குடிநீர் சரியாக வழங்கப்படுகிறதா என்றும், ஜாமின் மனு செய்துள்ளீர்களா என்றும் கேட்டார். பின்னர் சிறை அதிகாரி மற்றும் காவலர்களிடமும் ஏதேனும் பிரச்னைகள் உள்ளதா என கேட்டறிந்தார்.ஆய்வின் போது சட்டப் பணிகள் குழு வழக்கறிஞர்கள், பணியாளர்கள், சிறைக் காவலர்கள் இருந்தனர்.