வனத்துறை அமைச்சர் ஆய்வு
மயிலாடும்பாறை பகுதி மலை கிராமங்களுக்கு ரோடுகள், பாலங்கள் அமைப்பது தொடர்பாக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார்.
தாலையூத்து முதல் மல்லப்புரம் வரை ரோடு மேம்படுத்துவது தொடர்பான ஆய்வுகள் மேற்கொண்டார். மேலும் வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரோடு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மக்களுக்கு முறையாக வழிகாட்ட வனத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். கலெக்டர் ஷஜீவனா, எம்.எல்.ஏ., மகாராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அபிதாஹனீப், புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.