வைகை அணை கீழ் மதகுகளில் ஷட்டர்கள் பராமரிப்பு பணி
ஆண்டிபட்டி: வைகை அணை கீழ் மதகுகளில் உள்ள ஷட்டர்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.
வைகை அணையில் தேக்கப்படும் நீர் அணையின் கீழ்ப்பகுதியில் உள்ள ஏழு ஷட்டர்கள், மேல் பகுதியில் உள்ள ஏழு ஷட்டர்கள் வழியாக தேவைக்கேற்ப திறந்து விடப்படும்.
மின்விசை மூலம் இயக்கப்படும் ஷட்டர்களில் ஆண்டுதோறும் ஆண்டும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
தற்போது அணையின் கீழ் பகுதியில் உள்ள ஏழு ஷட்டர்களில் பராமரிப்பு பணிகளில் ரப்பர் சீல்டு புதுப்பித்தல், பெயின்டிங், ஆயிலிங் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாக நடந்து வரும் பணியில் தற்போது ஐந்து ஷட்டர்களில் பணிகள் முடிந்துள்ளது.
ஷட்டர் பராமரிப்பு பணிகளால் நீர் திறப்பில் எந்த பாதிப்பும் இல்லை என்று நீர்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர்.