மாணவர்களுக்கு விருது
தஞ்சாவூரில் இந்திய இளைஞர் பாரம்பரியம் சிலம்பம் சங்கம் சார்பில், தேசிய அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது.
இதில் வெற்றி பெற்ற பெரியகுளம் வேலன் வாழும் கலைக்கூடம் சிலம்பம் பயிற்சி மையம் சார்பில் சான்றிதழ், விருது வழங்கும் விழா நடந்தது. பயிற்சியாளர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். இணை பொறுப்பாளர் குரு முன்னிலை வகித்தார். நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோகுல கிருஷ்ணன் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், விருதுகள் வழங்கினார்.