போக்குவரத்து மேலாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
லோயர்கேம்ப் போக்குவரத்து கிளை மேலாளரை கண்டித்து திண்டுக்கல் மண்டல ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கம் சார்பில் லோயர்கேம்ப் பஸ் டெப்போ முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
லோயர்கேம்ப் பஸ் டெப்போ கிளை மேலாளராக இருப்பவர் ரமேஷ். இவர் டிரைவர், கண்டக்டர்களுக்கு தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகள் கொடுத்தும், பணி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாகவும் கூறப்பட்ட பல புகார்களை உயர் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாகக் கூறி நேற்று லோயர்கேம்ப் பஸ் டெப்போ முன்பு ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொழிற்சங்கங்களுக்கும், தொழிலாளர்களுக்கும் எதிராக செயல்படும் இக்கிளை மேலாளர் மீது போக்குவரத்து துறை செயலாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்டது. லோயர்கேம்ப் கிளை தலைவர் அரசமணி தலைமையில், திண்டுக்கல் மண்டல பொதுச் செயலாளர் பாஸ்கரன் முன்னிலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.