அப்துல் கலாம் நினைவு அறிவியல் கண்காட்சி
தேனி எடமால் தெரு டி.எம். எச்.என்.யு., வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு நாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடந்தது. 3ம் வகுப்பு மாணவர்கள் முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் வரை 270 பேர் தங்கள் படைப்புகளை காட்சி படுத்தினர். கண்காட்சியை தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறைத்தலைவர் ராஜமோகன் துவக்கி வைத்தார். துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன், பள்ளி செயலாளர் நவமணி, இணைச்செயலாளர்கள் அய்யன்மூர்த்தி, தீபக்கணேஷ் முன்னிலை வகித்தனர்.
மாணவர்கள் இயற்பியியல், வேதியியல், உயிரியியல், கணினி தொழில்நுட்பம், பசுமை வீடுகள், விவசாயிகளுக்கான கண்டுபிடிப்புகள் என பல்வேறு தலைப்புகளில் தங்கள் படைப்புகளை காட்சி படுத்தியிருந்தனர். அறிவியல் கண்காட்சியை பள்ளி முதல்வர் பூர்ணசெல்வி தலைமையில் துணை முதல்வர்கள் அனுஷா, அருண்குமார், சங்கீதா, ஆசிரியர்கள் செய்திருந்தனர். ஒவ்வொரு வகுப்பிலும் சிறந்த படைப்புகள் கண்டறியப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.