Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

தி.மு.க., வினர் ஆர்ப்பாட்டம்

தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே தி.மு.க., சார்பில், மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யாததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

தேனி எம்.பி., தங்கதமிழ்செல்வன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் எம். எல்.ஏ.,க்கள் ராமகிருஷ்ணன்(கம்பம்), மகாராஜன்(ஆண்டிபட்டி), சரவணக்குமார்(பெரியகுளம்), மாநில செயல்திட்ட குழு உறுப்பினர் மூக்கையா, மாநில கொள்கை பரப்புசெயலாளர் பாண்டின், தேனி நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா, மாவட்ட அவைத்தலைவர் செல்லப்பாண்டி, நகர செயலாளர்கள் நாராயணபாண்டி, புருேஷாத்தமன், முகமது இலியாஸ், ஒன்றிய செயலாளர்கள் பாண்டியன், லட்சுமணன், அய்யப்பன், முருகேசன், ரத்தினசபாபதி, அயலக அணி அமைப்பாளர் ராஜன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆசிப்கான், விளையாட்டு அணி அமைப்பாளர் ராஜசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *