நகராட்சியில் குடிநீர் வரி நிலுவை ரூ.10 கோடி இணைப்புகளை துண்டிக்க முடிவு
தேனி அல்லிநகரம் நகராட்சியில் குடிநீர் கட்டண பாக்கி ரூ.10 கோடிக்கு மேல் நிலுவை உள்ளது. நீண்ட காலமாக வரி, செலுத்தாத குடிநீர் பாதாளசாக்கடை இணைப்புகள்துண்டிக்கப்படும் என கமிஷனர் ஏகராஜ் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது: நகராட்சியில் இந்த நிதியாண்டிற்கான சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, பாதாளசாக்கடை, கடைவாடகை குத்தகை கட்டணம் நிலுவை அதிகம் உள்ளது. இதனால் குடிநீர் வினியோகம், தெருவிளக்கு, உள்ள அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில் சிரமம் ஏற்படும் நிலை உள்ளது. குறிப்பாக குடிநீர் கட்டணம் ரூ.10 கோடி பாக்கி உள்ளது. எனவே, நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகள், கட்டணம், கடை வாடகை உள்ளிட்டவற்றை ஆக.,31க்குள் செலுத்த வேண்டும். நீண்ட காலமாக செத்துவரி செலுத்தாமல் இருக்கும் சொத்துவரி ரத்து செய்யவும், குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.