தேனியில் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட லயன்ஸ் கிளப் ஆப் தங்க தமிழ் ..என்ற புதிய லயன்ஸ் கிளப் அறிமுக விழாவில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ் செல்வன் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார் ..
தேனியில் புதிதாக தொடங்கிய தங்க தமிழ் லயன்ஸ் கிளப் அறிமுக விழாவில் தங்க தமிழ் செல்வன் அவர்கள் குத்து விளக்கி ஏற்றி உரையாற்றினார். மேற்படி விழாவில் பெரியகுளம் சட்ட மன்ற உறுப்பினர் சரவணகுமார் வாழ்த்துரை ஆற்றினார்.இந்த புதிய சங்கத்தின் தலைவராக கண்ணன் அவர்களும், செயலராக ராஜசேகர் அவர்களும் பொருளாளர் ராம் பிரசாத் அவர்களும் பொறுப்பேற்றனர். இந்நிகழ்ச்சியில் பொறியாளர் ராதாகிருஷ்ணன், பெஸ்ட் ரவி,சுதந்திர ராஜன்,நௌஸாத், குபேந்திரன் ,மருத்துவர்கள் பாண்டியராஜ்,தியாகராஜ்,மற்றும் அன்னபிரகாஸ், ஆடிட்டர் ஜெகதீஷ்,பொறியாளர் பாலமுருகன், சில்வர் ஜூப்ளி அரிமா சங்கம் தலைவர் சௌந்திரம்,செயலாளர் ராஜன் மற்றும் தேனி முன்னாள் நகர செயலார் பாலமுருகன், துணை சேர்மன் செல்வம், பரத ஜெகதீஷ்,வழக்கறிஞர் ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். மற்றும் 19 அரிமா சங்கங்களின் தலைவர்,செயலாளர்,பொருளாளர் மற்றும் அரிமா முன்னோடிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.